கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் (சிறிய மகளின் ஊர் என்று பொருள்) மாவட்டத்தில் துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள
அமைதியான சிருங்கேரி என்ற இந்த நகரில்தான் இந்துக்களால் போற்றப்படும் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார்
தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில் கொஞ்சும் இந்த சிருங்கேரி நகரம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுதும் வருகை தரும் ஒரு புனிதத் தலமாகவும்
இருந்து வருகிறது.
சிருங்கேரியில்
குரு சங்கராச்சாரியாரின் சாரதா பீடமானது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது.
மேலும், புகழ் பெற்ற வித்யாஷங்கர் ஆலயம் (முதல் படம்) மற்றும் சாரதாம்பா கோயில் இரண்டும் சிருங்கேரியில்
அவசியம் பார்க்க வேண்டியவை.
வித்யாஷங்கர்
ஆலயம் மிகப் பழைமை வாய்ந்தது. இக்கோயிலினுள் 12 தூண்கள் 12 கிரக ராசிகளை ஒத்திருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பிரசித்தம்.
மேலும் இந்த ஆலயம் வானியல் தத்துவங்களை ஒட்டி கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிருங்கேரியில்
வருடம் முழுவதுமே மிதமான இதமான வெப்பநிலை நிலவுகிறது. பெங்களூரிலிருந்து 330 கி.மீ தொலைவிலும், மைசூருலிருந்து 250 கி.மீ.தொலைவிலும் உள்ளது.
No comments:
Post a Comment