KUMBA VURUTTI FALLS
A TREE WITH BUTTRESS ROOT
கும்பா உருட்டி நீர் வீழ்ச்சி என்பது கேரள மாநிலத்தில்
கொல்லம் மாவட்டத்தில் இயற்கை சூழ்ந்த எழில் கொஞ்சும் மலைகளுக்கிடைய அச்சன் கோவில் அருகே
அமைந்துள்ள ஓர் அழகிய, அசுரத்தனமான நீர் வீழ்ச்சி. இங்கு குளிப்பதற்கு ஏற்ற காலம் ஜூன்
முதல் அக்டோபர் வரையேயாகும்.
இந்நீர் வீழ்ச்சி தென்காசியிலிருந்து
குத்துக்கல் வலசை வழியாக அச்சன்கோயில் செல்லும் வழியில் 25வது கிலோ மீட்டரிலும், தென்காசி,
செங்கோட்டை, தென்பொத்தை, பண்பொழில், மேகரை வழியில் 28வது கிலோமீட்டரிலும் உள்ளது.
பண்பொழிலை தாண்டினால்
சாலை குறுகி ஒரு பேருந்து செல்லும் அளவிலான அகலத்தை கொண்டுள்ளது, ஆகவே, தனி ஊர்தி மூலம்
பயணிப்பவர்கள் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டியுள்ளது. செல்லும் வழியில் மேகரை என்ற ஊரிலிருந்து
வடகிழக்கு திசையில் எழி கொஞ்சும் மேகரை அணை என்ற அடவி நைனார் அணை காட்சி தருகிறது.
மேகரையினை அடுத்து மலையடிவாரம், அதனை தொடர்ந்து மலைப் பாதை தொடங்குகிறது, அதில் சில
கொண்டை ஊசி வளைவுகள். நாங்கள் சென்றது விடுமுறை நாள் என்பதால் பயணத்தில் பல இடங்களில்
வாகன நெரிசலில் சிக்கித் தவித்தோம் என்பதுடன் வாகனத்தை சாலையை விட்டு கீழே இறக்கி இயக்குவதில்
பல இடங்களில் இடர் இருந்தது, தொடர்ந்து பயணித்தோம், தென்காசியிலிருந்து 20 வது கிலோ
மீட்டரில் தமிழக கேரள எல்லை வந்தது, இங்குள்ள சோதனைச் சாவடியினை கடந்து சென்றால்
செல்லும் வழியெல்லாம் இயற்கை அன்னையின் கருணையாக அடர்ந்த பசுமை மாறா காடுகள் கண்கொள்ளா
காட்சியளிக்கிறது, பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைகள் பெரும்பான்மையாக பசுமை மாறா காடுகளைக் கொண்டதாகும்,
இதுவும் அதற்கு ஒரு சாட்சி.
மலையின் அடிவாரத்திலிருந்து மேல் நோக்கி ஏறும் போதே மழை தூவானமாக தொடர்ந்து பொழிந்து கொண்டேயிருந்தது. அருவிக்கு செல்லும் இடத்தை அடைந்து வாகனத்தை நிறுத்திவிட்டு அனுமதிச் சீட்டு பெற்று 400 மீட்டர் தூரம் உள்ள நடைபாதையின் குறுக்கே செல்லும் ஒரு சிறு காட்டாற்றின் மீது கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மீது வழிந்தோடும் நீரை கடந்து சென்றால் நூறாண்டை தொடும் வயதுடைய, வானுயர்ந்த, ஒரு மரம் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது, தொடர்ந்து நடந்து சென்று அந்த அழகிய, அசுரத்தனமான அருவியினை அடைந்தோம். குளியலினின் போது முதுகிலும் தலையிலும் பலத்த அடி விழுவது போன்ற உணர்வுடன் ஆனந்தக் குளியல் போட்டோம். அருவிக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டேயிருந்தது, நேரம் போனதே தெரியவில்லை, தூவானம் தொடர்ந்து கொண்டிருந்தது, நேரம் நண்பகலை நெருங்கியது, எங்களுடன் வந்திருந்த நண்பரின் ஆலோசனைப்படி எங்களது அடுத்த அனுபவத்திற்காக அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்த அனுபவம்
என்பது, செங்கோட்டையிலிருந்து மதுரை (கொல்லம் – திருமங்கலம் நெடுஞ்சாலை) செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில், பிரானூர் பார்டர் என்ற ஊரிலுள்ள ரஹமத் பரோட்டா ஸ்டாலில்
மதிய உணவு அருந்துவதுதான். பயணத்தினூடே இருந்த பயண நெரிசலை சமாளித்து பகல் 1.30 மணியளவில்
புகழ்பெற்ற அந்த ரஹமத் பரோட்டோ ஸ்டாலை அடைந்தோம். அருவியில் குளித்த பிறகு பசி அதிகரித்திருந்தது
ஆனால், அங்கும் கூட்டம் அலைமோதியது, மதிய உணவிற்கான மெனுவில் இருந்த ஆட்டுப் பிரியாணியுடன் ஒரு பரோட்டா மற்றும்
கோழி நறுக்கு வறுவல்களை பெற்று அருந்தினோம், சுவையோ அபாரம், நா நரம்புகளை சுண்டி இழுத்து
மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவை.
நண்பர்களே, செங்கோட்டை என்றாலே சுவையான இஞ்சி தேனீரும், இஞ்சிப் பாலும் பெயர் பெற்றது, ஆகவே, செங்கோட்டை சென்றால் அதனையும் சுவைக்கத் மறக்காதீர்கள்.
நண்பர்களே, செங்கோட்டை என்றாலே சுவையான இஞ்சி தேனீரும், இஞ்சிப் பாலும் பெயர் பெற்றது, ஆகவே, செங்கோட்டை சென்றால் அதனையும் சுவைக்கத் மறக்காதீர்கள்.
நண்பர்களே,
மற்றுமொரு பயண அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம்.