வெப்பமண்டல
தாவர மரபணு சேகரிப்பு மையம், நாடுகாணி (கூடலூர்),
நீலகிரி மாவட்டம்.
நீலகிரி மாவட்டம்.
மனித நாகரீகம் என்று துவங்கியதோ
அன்றே இயற்கையின் அழிவு துவங்கியது என்று குறிப்பிட்டால் அது மிகையாகது. நாகரீகத்தின்
வளர்ச்சி, இயற்கையின் வீழ்ச்சி எனவும் கூறலாம். மனிதனின் அபார திறமை, அதன் பயன்பாடு
இப்புவியில் மற்ற உயிரிகளும் வாழ்வதற்கு உரிமை பெற்றவை என்பதை ஏற்க மறுத்தது. இதன்
விளைவாக காடுகள் அழிக்கப்பெற்று மக்கள் வாழிடங்களாக மாற்றப்பட்டன. மனித இனத்தால் அறிப்படாமலேயே
பல உயிரினங்கள் இப்பூவுலகை விட்டொழிந்துள்ளன என்பதை எத்தனை பேர் அறிவர்.
நிலநடுக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ள
புவிப்பரப்பில் மட்டுமே பல்லுயிரித் தன்மை செழித்துள்ளது என்பதை உயிரியல் வல்லுனர்கள்
அறிவர். இந்தியாவும் அவ்வாறான பண்பை கொண்டிருக்கிறது. பசுமை மாறா காடுகள் / மழைக்காடுகள்
என்பவை நிலநடுக்கோட்டருகே உள்ள புவிப்பரப்பில் காணப்படும் வளமிக்க காடுகளாகும். குறிப்பாக
சோலைகள் தனித்துவமிக்க தாவர, விலங்குகளைக் கொண்டவை. இந்த பசுமை மாறா காடுகளின் சோலைகளிலிருந்தே
பல நதிகளின் மூலம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக நதிகளின் மூலம் தோற்றுமிடமாக
உள்ள “Sponge action” இவ்வகையான காடுகளில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பான நிகழ்வு.
ஆக, நதிகளின் மூலத்திலிருந்து தொடர்ந்து நீர் உருவாக இந்த “Sponge action” அவசியமாகும்
நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்தியச் சூழுலில் தோன்றி வாழும்
பல உயிரிகள் இந்த வாழிடத்திற்குரிய பண்புகளை பெற்றவை. இவ்வாறாக ஒவ்வொரு வாழிடத்திற்கும்
தனித்துவம் மிக்க தாவர, விலங்கினங்கள் இங்கு உள்ளன, இவை வேறு வாழிடங்களில் பல்கி பெருகும்
திறன் அற்றவை. ஆகவே, இவ்வகை உயிரிகளின் வாழிடங்கள் அழிக்கப்படும்போது அவ்வுயிரிகளும்
அழிந்தொழியும் நிலைக்கு தள்ளப்படுகின்றன, இத்தகைய உயிரிகளுக்கு “அருகி வரும் உயிரிகள்”
என்ற அந்தஸ்ததை மனித இனம் அளிக்கிறது.
ARBORETUM ZONE (மரக்கூட்டம்) IN GENEPOOL
Aerides crispum an epiphytic orchid in Genepool
A Shola in Genepool
Ferns grown in Genepool
Rhizome of a fern looks like Cat's leg
சோலைகளில் வெப்பமண்டல
தாவர இனங்களே காணப்படுகின்றன. ஆகேவே, அருகி வரும் இத்தகைய தாவர இனங்களை பாதுகாக்கும்
நடவடிக்கையாக 1990 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வனத்துறை வெப்பமண்டல தாவர இனங்களின்
மரபணுக்களை பாதுகாத்து பரப்பும் வகையில் 242.14 ஹெக்டர் பரப்பளவில் The Tropical Gene Pool Reserve என்ற வெப்பமண்டல தாவர மரபணு பாதுகாப்பு
மையத்தை துவக்கியது. இம்மையத்தில் 12 வகையான தாவர வகை மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இங்கு சோலைகளிலுள்ள தாவர இனங்களை அதே இடத்தில் (Insitu conservation) பாதுகாப்பதும்,
மறு அறிமுகம் மற்றும் மீட்புத் திட்டம் என்பதன் வாயிலாக அருகிவிட்ட அல்லது அழிந்துவிட்டது
எனக் கருதப்படும் தாவர இனங்களை திசு வளர்ப்பு முறை வாயிலாக ஆய்வகங்களில் உருவாக்கி
வளர்த்து இயற்கை நிலையில் வளரும் தன்மைக்கு கொண்டு வந்து காடுகளில் நடவு செய்து (Exsitu
conservation) பாதுகாப்பதும், வேகமாக குறைந்து வரும் தாவர இனங்களை உடல இனப்பெருக்கம்
மூலம் பெருக்கி காடுகளில் நடவு செய்து பெருக வைப்பதுமே இம்மையத்தின் நோக்கம். இங்கு
’யாணைக் களஞ்சு’ உட்பட சுமார் 1200 தாவர சிற்றினங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தாவர கணக்கெடுப்பு
ஆய்வகத்தில் (Botanical Survey of India) உள்ளது போலவே உலர் தாவர தொகுப்பும்
(Herbarium), நிழல் / பசுமை இல்லமும் (Shade house/Green house), ஆர்க்கிட் வளர்ப்பகம்
(Orchidarium), பெரணி இல்லமும் (Fern house) நிறுவப்பட்டுள்ளன. திசு வளர்ப்பு ஆய்வகம்,
பனிகூடாரம் (Mist Chamber) அகியனவும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இவை தாவரவியல் பயிலும்
மாணவர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகது.
இம்மையத்தை கண்டுணர வேண்டுமானால்
உதகமண்டலத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கூடாலுர் என்றொரு சிறு நகரத்தை அடைந்து
அங்கிருந்து நிலம்பூர் (கோழிக்கோடு செல்லும் சாலையும் கூட) செல்லும் சாலையில் கூடலூரிலிருந்து
12-வது கிலோ மீட்டரிலுள்ள நாடுகாணி என்ற கிராமத்தை அடைய வேண்டும். இங்கு செல்வதற்கு
முன்பாக கூடலூரிலுள்ள கோட்ட வன அலுவலகத்தில் முன் அனுமதி பெறுதல் அவசியம்.
இங்கு இதமான பருவ நிலை நிலவுகிறது
. ஆண்டொண்டிற்கு சுமார் 300 மி.மீ. மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. கடல் மட்டத்திலிருந்து
சுமார் 1100 மீட்டர் உயரத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தேயிலை, காஃபி,
கொக்கோ, ஏலக்காய் போன்ற மலைப்பயிர்களுடன் தென்னை, நெல் போன்றவும் பயிரிடப்படுகின்றன.
இம்மையம் மேற்கு தொடர்ச்சி மலையில்
அமைந்துள்ளதால் தென்மேற்கு பருவ மழையானது மே மாதம் 15 ஆம் தேதி மேல் துவங்கி ஆகஸ்ட்
வரை நீடிக்கும், இதில் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் தொடர்ச்சியான மழை பொழிவு இருக்கும்
என்பதால் இக்காலம் இப்பகுதிக்கு செல்ல உகந்த காலமல்ல. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை
இதமான பருவநிலை இருக்கும் என்பதால் இம்மாதங்களே இப்பகுதிக்கு செல்ல உகந்த காலமாகும்.
Flowers of Amaryllis belladonna commonly called as Naked Lady of forest.
ஏட்டுச் சுரைக்காய்
கூட்டுக்கு உதவாது என்பது சொலவடை. ஆகவே, சுற்றுச் சூழல் என்று ஏடுகளில் படிப்பதை மட்டும்
கொண்டு சுற்றுச் சூழலைப் பற்றியும், இயற்க்கையின் செழுமை பற்றியும் பேசுவதை விட்டு
விட்டு, இது போன்ற பசுமை மாறா காடுகள், சோலைகள், ஆர்கிடுகள், செடிப் பெரணிகள், மரப்பெரணிகள்,
நீட்டம் உலா எனப்படும் ஜிம்னோஸ்பெர்மகள் போன்றவற்றை கண்டுணர்ந்து அறிவோம் நண்பர்களே.
மீண்டுமொரு
பயண அனுபவத்தில் சந்திப்போம்.