வெப்பமண்டல
தாவர மரபணு மையம், நாடுகாணி, கூடலூர் வட்டம், நீலகிரி மாவட்டம்.(இரண்டாவது பயணம்)
நாடுகாணி [TGPR] வெப்பமண்டல தாவர மரபணு மையத்திற்கு
(The Tropical Gene pool reserve, Nadugani)
நானும், எனது நண்பர்களும் கடந்த 2012 ஆம்
ஆண்டில் சென்று வந்த பிறகு 17/09/2016 அன்று மீண்டும் நானும், எனது நண்பர்களும் அங்கு
செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கூடலூர் வசதி வாய்ப்புகளில் குறிப்பாக தங்கும்
விடுதி வசதிகள் நன்கு முன்னேறியுள்ளது மட்டுமின்றி அங்கு உள்ள சாலைகளும் மிகவும் நன்றாகவே
பராமரிக்கப்படுவதை கண்டு ஆச்சரியமடைந்தேன், ஏனெனில், நான் அங்கு பணியாற்றிய 1991 ஆம்
ஆண்டு முதல் 1993 ஆண்டு முடிய சாலைகளில் பயணிக்க முடியாத அளவிற்கு மிக மோசமாக இருந்தன.
தங்கும் விடுதிகள் பல நல்ல முறையில் தற்போது அங்கு உள்ளன. இது சுற்றுலாவாசிகளுக்கு
ஒரு நல்ல செய்தி.
அருங்காட்சியகம் முன்பு
அருங்காட்சியகத்தினுள் ஒரு காட்சி
2012 ஆம் ஆண்டில் நாங்கள்
அங்கு சென்றிருந்தபோது 242.14 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மையத்தில் மேம்பாட்டுப்
பணிகள் நல்ல முறையிலேயே நடந்து வந்தன, ஆனால் இம்முறை அங்கு சென்ற போது தற்போது மேம்பாட்டுப்
பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, குறைந்தளவு பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெற்று
வருவதை அறிய முடிந்தது. இவ்வாறான நிலைப்பாடட்டினால் வெப்பமண்டல தாவர மரபணு மையம் துவக்கப்பட்டதற்கான
நோக்கம் நிறைவேறாமல் போனது எனக்கு வருத்தத்தையே தந்தது.
1. Arboretum zone,
2. Medicinal plants zone, 3. Minor forest produce zone, 4. Shola species zone,
5. Shrub zone, 6. Herbaceous zone, 7.
Grass zone, 8. Cycads & Conifers
zone, 9. Bamboo zone, 10. Palm zone, 11. Reeds & Canes zone என்ற 11 பகுதிகள்
கொண்ட இம்மையத்தில் தற்போது Arboretum zone எனப்படும் மரவகைத் தாவரப் பகுதியில் மட்டுமே
குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் மரங்கள் வளர்ந்திருப்பது சற்று ஆறுதலாக இருந்தது.
இதனை Man made forest என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதற்கு அடுத்தபடி மருத்துவத்
தாவரப் பகுதி (Medicinal plants zone), புதர் தாவரப் பகுதி (Shrub zone) ஆகியவற்றில்
ஓரளவிற்கு தாவரங்கள் இருப்பதை அறிய முடிந்தது.
வெப்ப மண்டல மரபணு யைமத்தினுள் உள்ள சோலைக் காட்டின் மேற்பரப்பு.
பெரணி இல்லத்தினுள் சில காட்சிகள்.
2012 ஆம் ஆண்டில் செயல்பட்டு
வந்த தாவர திசு வளர்ப்பு ஆய்வகமும், ஹெர்பேரியம் எனப்படும் உலர்தாவரத் தொகுப்பும் ஆகியன
தற்போது பராமரிக்கப்படாமல் உள்ளது. ஹெர்பேரியம் பராமரிக்கப்பட்டால்தான் இப்பகுதிக்குரிய
தாவரங்களின் அறிவியல் பெயர்களை எதிர்காலச் சந்ததிகள் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கும்,
ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பில்லை. ஆனால், தற்போது அருங்காட்சியகம் பல தகவல்களை உள்ளடக்கியதாக
மேம்படுத்தப்பட்டுள்ளது. பல அரிய தகவல்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீலோகைன் ஆர்கிட் மலர்
நிர்வாக அலுவலகம் உள்ள
பகுதியினைச் சுற்றி யாணைகளின் தொல்லையினை தவிர்க்க சுமார் 20 அடி ஆழமும் சுமார் 8 அடி
அகலமும் கொண்ட அகழி போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டிந்ததால் நாங்கள் சோலைக் காடுகளை காண
இயலவில்லை.
இருப்பினும் பெரணி இல்லம்
[Fern house], நிழல் இல்லம் [Shade house], ஆகியன நன்கு பராமரிக்கப்படுகின்றன என்பதைக்
கண்டறிந்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் திசு வளர்ப்பு ஆய்வகம் செயல்பாட்டில்
இல்லாததால் பனிக்கூடாரம் [Mist Chamber] பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.
இம்மையத்திலுள்ள காட்சி
கோபுரத்திலிருந்து TGPR-ன் அனைத்துப் பகுதிகளையும் கண்டுகளித்துவிட்டு திரும்பினோம்.
இம்மையமானது தாவரவியலை
முக்கிய பாடமாக பயின்று வரும் மாணவர்களுக்கும், சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் பற்றியும்
அறிந்து கொள்ள ஆவலுள்ளவர்களுக்கும் தேவையான செய்திகளை தாங்கியுள்ளது என்பதை நான் குறிப்பிட
விரும்புகிறேன்.
நாங்கள் தங்கியிருந்த விடுதி.
மேற்காண் வெப்பமண்டல தாரவ மரபணு மையத்தின் கையேட்டிளை .pdf நகலை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பின் மீது சொடுக்கவும்.
https://www.dropbox.com/s/2d56wlufe47u5ol/TGPR%20booklet.pdf?dl=0
மற்றுமொரு பயண அனுபவத்தில்
சந்திப்போம் நண்பர்களே!